ஞாயிறு, 15 நவம்பர், 2009

நினைப்பு

பகல்முழுக்க ஓடி
அலுத்துச் சலித்த
இரவுகளில்...
எப்போதாவது அணைக்கும்
தொந்தி குலுங்கும்
கணவனின் கீச்சுக்குரலில்...
“பன்னி மாதிரி ஆயிட்டேடி”
வார்த்தை ஊசிகள்
கிளறிவிடும்...
தாவணிப்பருவத்தில்
முதல்முத்தம் கொடுத்த
அரும்புமீசைக் காதலனின்
முகம்...
மிக மங்கலாய்...
“அப்படியே இருந்திருக்கலாமோ?”

4 பேரு கிடா வெட்டுறாங்க:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தம்பி
நல்லா எழுதுறீங்க..

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

விந்தைமனிதன் சொன்னது…

//தம்பி
நல்லா எழுதுறீங்க.. //

ர்ர்ர்ரொம்ப நன்றி அண்ணா! அடுத்த இடுகையை பாருங்க. டெர்ரரா இருக்கும். அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க

D.R.Ashok சொன்னது…

சூப்பர்

அனுஜன்யா சொன்னது…

நல்லா இருக்கு. எல்லோருக்கும் சொல்வதுதான். நிறைய வாசியுங்கள். நிறைய எழுதவும் செய்யுங்கள்.

அனுஜன்யா

Related Posts with Thumbnails