சனி, 14 நவம்பர், 2009

நினைவினின்று நழுவும் முன்...

மிக உயரத்தில்
வட்டமிட்டபடி கழுகுகள்...
தூரத்திலிருந்து சன்னமாய்
இன்னும் கேட்டுக்கொண்டுதானிருகின்றது
பீரங்கி முழக்கம்....

மெல்ல மெல்ல
அசைந்து வந்து
அந்தியைத் தழுவும் இருளாய்
என்னிடத்தே
மரணத்தின் சாயல்...

மார்பிலும் வயிற்றிலும்
பொருந்திய குண்டுகள்
உயிராழத்தை ரணப்படுத்தியபடி...

குருதி குடித்துச் சிவந்த
என் தாய்மண்ணே!
நாளை உன்னிடத்தே
நான் பொறிக்கப் படலாம்
அல்லது
மறக்கப்படலாம்...

நான் போகிறேன்...

என்ன செய்யப்
போகிறாய்...
எனக்காய்க் காத்திருக்கும்
என் மனைவியை?

8 பேரு கிடா வெட்டுறாங்க:

Dhivya சொன்னது…

hi da,

intha kavithai romba nalla iruku...but intha 3 linesla porikapadalam ku pathila vera yethavathu replace pani paren...

நான் பொறிக்கப் படலாம்
அல்லது
மறக்கப்படலாம்...

Manaiviku pathila...yenn pillaiyai nu mathina inum powerfula irukum nu thonuthu....just a comment pls dont mistake me....

என்ன செய்யப்
போகிறாய்...
எனக்காய்க் காத்திருக்கும்
என் மனைவியை?

Anbu சொன்னது…

Ji,
Neenga kavithi yellam eluthuveeeeeengala?!!!!!?

Nallavea irukku

Thorattum vungal payanam

Valthukkal

Anbuvel

வானம்பாடிகள் சொன்னது…

வலிக்க வலிக்க சொல்லி இருக்கிறீர்கள் நண்பா.

விந்தைமனிதன் சொன்னது…

நன்றி தோழி திவ்யா

//Ji,
Neenga kavithi yellam eluthuveeeeeengala?!!!!!?//
என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க?
"ரைட் உடு" அடிக்கடி வாங்கண்ணே!

//வலிக்க வலிக்க சொல்லி இருக்கிறீர்கள் நண்பா.//
நன்றி நண்பா.
அப்பப்போ எட்டிப் பாருங்க

பிரபாகர் சொன்னது…

நன்றாய் இருக்கிறது. நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.

ஜெனோவா சொன்னது…

நன்றாக இருக்கிறது , தொடர்ந்து எழுதுங்கள் !

வாழ்த்துக்கள் .

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

அன்பு தம்பிக்கு,
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...
கவிதை ஆரம்பம் அருமை.. தன் மொத்த சந்ததிக்காக சாகும் வீரன் தன் குருதி குடித்த மண்ணிலிருந்து மீண்டும் முளைப்பேன்.... உன்னை முடிக்க என வரும்படி இருந்தால் நன்றாக இருக்கும்...

வலையுலகுக்கு உங்களை வரவேற்கிறேன் ....

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

D.R.Ashok சொன்னது…

இதுவும் நல்லாயிருக்கு...

Related Posts with Thumbnails