புதன், 19 ஜனவரி, 2011

முத்தம்

பகல்முழுக்க ஓடி
அலுத்துச் சலித்த
இரவுகளில்...
எப்போதாவது அணைக்கும்
தொந்தி குலுங்கும்
கணவனின் கீச்சுக்குரலில்...
“பன்னி மாதிரி ஆயிட்டேடி”
வார்த்தை ஊசிகள்
கிளறிவிடும்...
தாவணிப்பருவத்தில்
முதல்முத்தம் கொடுத்த
அரும்புமீசைக் காதலனின்
முகம்...
மிக மங்கலாய்...
“அப்படியே இருந்திருக்கலாமோ?”

8 பேரு கிடா வெட்டுறாங்க:

ஹேமா சொன்னது…

தொந்திக் கணவருக்கும்,பன்னிக்குட்டிக்கும் பொருத்தமாத்தானே இருக்கும் !

Philosophy Prabhakaran சொன்னது…

ம்ம்ம்... திருமணமான நிறைய பேருக்கு இதே பீலிங் தான்...

Philosophy Prabhakaran சொன்னது…

மீள்பதிவுன்னு சொல்லவே இல்லை...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கவிதை???????????

காமராஜ் சொன்னது…

கதையோ கவிதையோ இந்த மண்ணிலே தான் காலங்காலமாய் புதையுண்டு கிடக்கிறது.அது காத்துகொண்டிருக்கும். ஒரு சரியான கவிஞன் தன்னை அறிந்து கொள்ளவும்,உலகுக்கு சொல்ல.

அப்படியொரு கவிதை.

ஆனந்தி.. சொன்னது…

so sweet :))

கவிதை காதலன் சொன்னது…

செமையா இருக்கு கவிதை.. கடைசி பஞ்ச் அட்டகாசம்

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

dheva சொன்னது…

எதார்த்தம்... தம்பி!

Related Posts with Thumbnails