உலர்ந்துபோன என் உதடுகளில்
ஒட்டவைத்துப் போகிறாய்
ஒரு புன்னகையை
நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை
தூக்கம் கலைந்த அதிகாலைகளில்
மீண்டும் தொடர்கின்றன
முத்தம் பற்றிய கனாக்கள்
இமைகளைப் பறித்துக்கொண்ட
மொட்டைமாடி இரவுகள்
எத்தனை யுகங்களாய்
நீள்கின்றன?
கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்
10 பேரு கிடா வெட்டுறாங்க:
அழகான வரிகள் .. வாழ்த்துகள்
//நீண்டதூரப் பயணங்களின்
ஜன்னலோரங்களில்
எழுதிக் கொண்டே
இருக்கிறேன்
உனக்கான என் கவிதையை//
//கவிதைக்குச் சொற்களைத்
தேடிக்கொண்டிருந்தபோது
மெல்லக் கடந்து
செல்கிறது
உன் காதல்//
மனதை தொட்ட வரிகள்... கலக்குங்க...
"காதல் பற்றிய கதைகளை, காவியங்களை, கட்டுரைகளை, கவிதைகளை படிக்க.. படிக்க அலுப்பதில்லை, பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் காதல் அந்தரங்கமாக நம்முள் எப்படியோ கலந்துவிடுகிறது, அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது.. காதல் எப்போதும் ஒருவருக்கு மாதிரி மற்றவருக்கு வாய்ப்பதில்லை, காதலித்த காலத்தில் ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் கல்யாணம் முடிந்தபின் விவாகரத்தான கதைகள் உண்டு, அதேபோல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள் வாழ்கிற காலம் முழுதும் காதலித்த கதைகளும் உண்டு, வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் காதல் சுவாரஸ்யமானதுதான்.'
rightu..:)
கேபிள் சங்கர்
//அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது..//
அண்ணே இது போங்காட்டம்
நன்றி சுதாகர்
நன்றி அ...ஆ...
கேபிள்ணா சொல்லிட்டீங்கள்ள இனி ஒரே எண்டர் தான்
//அதனால் யார் இதனைப்பற்றி போரடித்தாலும் கேட்க தோன்றுகிறது..//
என்னையும் சேத்துதான் சொன்னேன் .
நன்றி சுதாகர்
நன்றி அ..ஆ... உங்கள் ரசனை என்னை ரொம்பவே உற்சாகப்படுத்துகின்றது
nice.
@ பா.ராஜாராம்
கவிஞரே சொல்லிட்டாரு... இனி நம்மள கையில புடிக்கமுடியும்???
நேசமித்திரன் எங்கே?
விந்தைமனிதன் யாருங்க அது? உங்கள இந்த அளவு பீல் பண்ண வைக்கிறது? சூப்பர், கவிதை... கவிதை..
கருத்துரையிடுக