புதன், 2 ஜூன், 2010

மயில்-சந்தனமுல்லை-நர்சிம்-வினவு-உண்மைத்தமிழன் -பைத்தியக்காரன் -சுகுணா.....அடுத்து??

மூன்று துறவிகள்...
ஒன்றாய்த் தியானித்திருக்கும் நேரம். அறையில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி. எல்லாம் நன்றாய்த்தான் போய்க்கொண்டிருந்தது.... காற்று சற்று வேகமாய் வீசும்வரை... வீசிய காற்றில் தீபம் சற்று வேகமாய் அசைந்தது.

“அணைந்துவிடப் போகிறது.. சன்னலை மூடு” இது முதல் துறவி

“சத்தம் போடாதே.. நாம் தியானிக்கிறோம்” இரண்டாமவர்

“வாயை மூடுங்கள் மூடர்களா” என்று திருவாய் மலர்ந்தார் மூன்றாமவர்...

ஆக மூவருமே தியானம் செய்யவில்லை... அப்படி நடித்துக் கொண்டிருந்தனர்.

’மயிலி’ன் காற்று வீச பதிலுக்கு நர்சிம் அனலள்ளிக் கொட்டியதில் காயம்பட்டுத் துடிக்கிறார் முல்லை... முல்லையின் பக்கம் நின்று சமரசங்களுக்கு உட்படாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் செந்தழல் ரவி, மாதவராஜ் முதலானோர்... இன்னொரு திசையில் “நர்சிம் பண்ணது தப்பில்ல.. முல்லையும் மயிலும் தான் ஆரம்பிச்சது” என்று சற்றும் தயங்காமல் கார்க்கி போன்றோர்... இடையில் “ பண்ணினது தப்புத்தான். கண்டிச்சு மன்னிச்சு விட்டுடலாம்” என்று சப்பைக்கட்டு கட்டியபடி வேறு சிலர்... எதிலும் சேராமல் “யாரை யாரு என்ன சொன்னா நமக்கென்ன?”ன்னு மவுனம் சாதித்துக் கொண்டு இன்னொரு கும்பல்...

இறுதியாக வருகின்றனர் வினவு தோழர்களும், உண்மைத் தமிழன் அண்ணாச்சியும்.

வலையுலகில் இதுவரை நாம் யாரையெல்லாம் ஏற்றிவைத்துக் கொண்டாடினோமோ அவர்கள் எல்லாம் ஒளித்துவைத்திருந்த இன்னொரு முகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகிறார்கள்.

முதலில் முல்லை...

நர்சிம்மைத் திட்டுவது என்று முடிவெடுத்தபிறகு நேரடியாகச் செய்யவேண்டியதுதானே? அதற்கு ஏன் நீண்டகாலத் தயாரிப்பு? பின்னர் இன்னொருவரின்(மயிலின்) பின் ஒளிந்துகொண்டு பகடி என்ற பெயரில் தாக்கவேண்டும்? அந்த குறிப்பிட்ட இடுகையைத் தூக்கச்சொல்லி வேண்டுகோள்கள் வந்தபின்னும் ‘எதையும் சந்திக்கத் தயார்’ என்று ஸ்டேட்மெண்ட் விடவேண்டும்? நர்சிம் என்ன எதிர்த்தாக்குதல் செய்தாலும் சரி என்ற தைரியமா? மேலும் நர்சிம் பற்றிய வினவின் பதிவில் நர்சிம் தன்னுடைய ஃபோன் நம்பரைக்கேட்டு பலரை நச்சரித்ததாக பின்னூட்டுகிறார். அப்படிப்பட்டவர் ஏன் இத்தனை காலம் நர்சிம்மின் தளத்துக்குச் சென்று பின்னூட்டமிடவேண்டும்? தவறான நபர் என்று உங்களுக்குப் பட்டிருந்தால் விலகி இருக்கலாமே?

அடுத்து நர்சிம்....

‘பூக்காரி’ பதிவு(புனைவு??!!) அப்பட்டமான ஆணாதிக்கத்திமிர்.... எதிர்ப்பது பெண்ணென்றால் “தேவடியா”ப் பட்டம் கட்டும் அசிங்கப் புத்தி... ”இதேபோல் ஒருவார்த்தை உங்கள்வீட்டுப் பெண்களைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் நர்சிம்? இதுவரை நீங்கள் மனதார வருந்தியதாகத் தெரியவில்லையே? இன்னும் அதைப் புனைவு என்றுதானே சொல்லி வருகிறீர்கள்? நீங்கள் எழுதியது தார்மீகரீதியாகப் பதில்கூறக் கடமைப் பட்டது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?”

அடுத்து பின்னூட்டக்கும்மியில் ‘குழந்தையைக் கொல்லலாம்’ என்று கொக்கரிக்கிறார் கார்க்கி.... திமிர்.. அயோக்கியத்தனம் எப்படிச் சொன்னாலும் அந்த வார்த்தைகளைத் தாண்டியும் நிற்கிறது அவரது வக்கிரம்...

நர்சிம்மின் இடுகையை மிகக் கடுமையாக விமர்சித்து வினவு தோழர்கள் பதிவெழுதுகிறார்கள்.... அதன் தொடர்ச்சியாக வினவு தோழர்களை வெளியாள் என்றும், அரசியல் ரௌடிகள் என்றும், முதலாளித்துவவாதிகள் என்றும் தனிமனிதத் தாக்குதல் நடத்தி விளாசுகிறார் உ.த அண்ணாச்சி.. பதிவுலகம் பதிவர்களைத் தாண்டியது என்பதையும் , யாரும் யாருக்கும் பட்டாபோட்டுத்தரவில்லை என்பதையும் பாவம் அண்ணாச்சி அறிந்துகொள்ளவில்லை போலும்.. எத்தனை கால வஞ்சமோ? இப்போது தீர்த்துக்கொள்கிறார்

நான் மிகவும் மதிக்கும் வினவு தோழர்கள் தாம் சுயமாக எழுதாத ஒன்றைத் தனதுபேரில் போட்டுக்கொள்கிறார்கள்... சந்தேகப் பட்ட மணிகண்டன் என்பவரிடம் இல்லவே இல்லை என்று முழக்கமிடுகிறார்கள்.

பிறகு சுகுணா வந்து பைத்தியக்காரன் தான் எழுதியதைத் தானே வெளியிட தைரியமின்றி வினவுக்குப் பின் ஒளிந்து கொள்கிறார் என்று குட்டை உடைக்கிறார்.... வினவும் பைத்தியக்காரனும் இரட்டைவேடம் கலைந்தபின் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்... அடடா என்ன ஒரு கம்யூனிசநேர்மை...

தான் செய்வது தவறேயானாலும் தன் பேரில் எழுதிய நர்சிம்மைத் தாக்க இப்படி ஒரு கள்ளக் கூட்டணி... ஏன் வினவு தோழர்களுக்கு சுயபுத்தி இல்லையா?

வினவின் பின்னூட்டத்தில் சுகுணாவை ’மாங்காமடையன்’ என்கிறார் வந்தனா என்பவர். அது ‘நாகரீக’மான பின்னூட்டம்.. அதைக் கண்டித்து நான் எழுதியது ’ஆபாசம்’ போல. என் பின்னூட்டத்தை வினவு வெளியிடவில்லை..ஆகக் கூடி ”நர்சிம் எப்படா மாட்டுவான்? ங்கொய்யால கூட்டு சேர்ந்து கும்மிடலாம்” என்று காத்திருந்த ஒரு குழு...

“வினவை எப்ப அடிக்கலாம்? எப்படி விரட்டலாம்?” என்று ஒரு குழு...

பின்னூட்டக் கும்மியில் பாய்ந்த ஆபாசச்சாக்கடையில் மங்கிப்போய்விட்டது நர்சிம்மின் தவறு

போங்கடா நீங்களும் உங்க நாகரீகமும்..

டிஸ்கி: இந்தப் பதிவில் வந்து என்னைக் கெட்டவார்த்தையால் திட்டுபவர்கள், மைனஸ் ஓட்டு போடுபவர்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள்
Related Posts with Thumbnails