புதன், 18 நவம்பர், 2009

புறநானூற்றுக்காலத்திலிருந்து தொடரும் தமிழ்வீரத்தின் வரலாறு...

"மீனுண் கொக்கின் தூவியன்ன

வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்

நோன் கழை துயல் வரும் வெதிரத்து

வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"

- புறநானூறு 277

(நானொன்றும் இலக்கியங்களைக் கரைத்துக்குடித்தவனல்ல. சிறு வயதில் என் ப்ரியத்துக்குரிய தமிழாசிரியர் தன் தனிச்சிறப்பான அங்க அசைவுகளோடு உணர்ச்சிமயமாக விளக்கிச்சொன்ன பாடல் இது. அதனால் மனப்பாடம்...)

கரிகாலனும்,செங்குட்டுவனும் இமயம் சென்றதும், ராஜராஜன் ரோகணமலை தவிர்த்த முழு இலங்கையையும் வென்றதும் எனப் பலப்பல வரலாறுகள்!!இந்தப் பழம்பெருமை மட்டுமே தமிழினத்தின் சொத்து எனக்கேலி பேசியவர் சிலையெனச் சமைந்து நிற்க புதிய புறநானூறு படைத்தவர் விடுதலைப்புலிகள்.

ஆனையிறவுப்பெருந்தள முற்றுகைப்போர்...
ஆம்... உலகத்து போரியல் வல்லுனர்களெல்லாம் “இது மனித சாத்தியமா?” என்று வியந்தோதி நின்ற மாபெரும் போர்க்களச்சாதனையை தமிழர் வரலாற்றிற்குச் சொந்தமாக்கிய போர்.

இதுவரை இப்போர் பற்றி எத்தனைமுறை படித்திருந்தாலும் படிக்கப்படிக்க மெய்சிலிர்க்கும் இந்தக்கட்டுரை இது.

வெளியிட்டவர்கள் http://tamilseithekal.blogspot.com/2009/10/2000_24.html
அனுமதியின்றி வெளியிடுவதற்கு மனமார மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்.

இனி:

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குடாரப்புவில் தரையிறக்கப்படுவதற்கென வெற்றிலைக்கேணியில் இருந்து கடல்வழியே தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான படை நகர்வொன்றை முன்னெடுத்தனர். கடற்புலிகளின் படகுகளில் 1200 வரையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தாளையடி முகாம் மீதிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்நோக்கிச் செல்லும் சூழலிற்குத் தள்ளப்பட்டும் மேலும் குடாரப்புப் பகுதியில் தரையிறங்கும் குறிக்கோளுடன் சென்றனர்.குடாரப்பு தரையிறக்கச் சமர்
ஈழப்போராட்டவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.

சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.
ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.

26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.

தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.


[சிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக]

புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.

வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.

அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.
[வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்]

தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு - கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி - கண்டிவீதியில் முகமாலை வரை - கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.

சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.

பளை ஆட்லறித்தளத் தகர்ப்பு:

26.03.2000 அன்று இரவு விடுதலைப்புலிகளின் சிறிய அணியொன்று மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. முதல்நாளே கடல்வழியாக எதிரியின் பகுதிக்குள் ஊடுருவிவிட்டிருந்தனர் அவ்வணியிலுள்ளவர்கள். அதுவொரு கரும்புலியணி. ஆண்போராளிகளும் பெண்போராளிகளும் அதிலிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பளையை அண்டிய பகுதியில் இரகசியமாக நகர்ந்துகொண்டிருக்கின்றனர். அப்போது ஆனையிறவு எதிரியின் வசமிருந்தது. அன்று இரவுதான் வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற இருந்தது. இவர்கள் நகர்ந்துகொண்டிருக்கும் அதேநேரத்தில் கடலில் தரையிறக்க அணிகளைக் காவியபடி கடற்புலிகளின் படகுகள் நகர்ந்துகொண்டிருந்தன.

குறிப்பிட்ட கரும்புலி அணிக்குக் கொடுக்கப்பட்ட பணி, பளையிலுள்ள பாரிய ஆட்லறித்தளத்தை அழிப்பதுதான். பின்னொரு சமரில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் வர்மனின் தலைமையில் அவ்வணி பளை ஆட்லறித்தளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. முழுவதும் எதிரியின் கட்டுப்பாட்டுப்பகுதி. எந்தநேரமும் எதிரியோடு முட்டுப்பட்டு சண்டை மூளக்கூடும். இயன்றவரை அவ்வணி இடையில் வரும் சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். இலக்குவரை வெற்றிகரமாக, சலனமின்றி, எதிரி அறியாவண்ணம் நகரவேண்டும். அவ்வணியில் மொத்தம் பதினொருபேர் இருந்தார்கள்.

குறிப்பிட்ட ஆட்லறித்தளம் வரை அணி வெற்றிகரமாக நகர்ந்தது. நீண்டநாட்களாக துல்லியமான வேவு எடுத்திருந்தார்கள். அதுவும் தற்போது அணியை வழிநடத்திவரும் வர்மனும் ஏற்கனவே வேவுக்கு வந்திருந்தான். எனவே அணியை இலகுவாக இலக்குவரை நகர்த்த முடிந்தது. ஆட்லறித்தளத்தின் சுற்றுக்காவலரண் தொடருக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். இனி சண்டையைத் தொடக்கி காவலரணைத் தகர்த்து உள்நுழையவேண்டியதுதான். இந்தநிலையில் காவலரணிலிருந்து 25 மீற்றர்தூரத்தில் அணியினர் இருக்கும்போது எதிரியே சண்டையைத் தொடக்கிவிடுகிறான். தடைக்குள்ளேயே அவ்வணியின் முதலாவது வீரச்சாவு நிகழ்கிறது. கரும்புலி மேஜர் சுதாஜினி என்ற வீராங்கனை முதல்வித்தாக விழுந்துவிட்டாள்.

சண்டை தொடங்கியதும் கரும்புலியணி உக்கிரமான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டு காவரணைக் கைப்பற்றுகிறது. மின்னல்வேக அதிரடித் தாக்குதலில் எதிரி திகைத்து ஓடத்தொடங்குகிறான். தாக்குதல் நடத்துவது பத்துப்பேர் கொண்ட சிறிய அணியென்பதை அவன் அனுமானிக்கவில்லை. ஆட்லறித்தளத்தைப் பாதுகாத்துநின்ற நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் சண்டை தொடங்கிய மறுநிமிடமே ஓட்டடமெடுத்துவிட்டனர். ஆட்லறித்தளம் எஞ்சியிருந்த பத்துப்பேர் கொண்ட அணியிடம் வீழ்ந்த்து.

ஆட்லறிகள் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. மொத்தம் பதினொரு ஆட்லறிகள் இருந்தன. ஓடிய எதிரி பலத்தைத்திரட்டிக்கொண்டு மீண்டும் தளத்தைக் கைப்பற்ற வருவான். இருப்பதோ பத்துப்பேர் மட்டுமே. இது தாக்கயழிப்பதற்கான அணி மட்டுமே. மீண்டும் கைப்பற்றவரும் எதிரியோடு சண்டைபிடிக்க முடியாது. ஆனாலும் போதுமான நேரம் இருந்தது. எதிரி உடனடியாக தளத்தைக்கைப்பற்ற முனையவில்லை. குறிப்பிட்டளவு நேரம் தளத்தைக் கட்டுப்பாட்டுள் வைத்திருந்து பின்னர் தலைமைப்பீட அறிவுறுத்தலின்படி ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்யத் தொடங்கினார்கள். இந்த நடவடிக்கையில் கரும்புலி மேஜர் தனுசன் வீரச்சாவடைந்தான். பதினொரு ஆட்லறிகளையும் செயலிழக்கச் செய்துவிட்டு எஞ்சிய ஒன்பதுபேரும் பாதுகாப்பாகத் திரும்பினர். ஆட்லறிகள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது குடாரப்புவில் தரையிறக்கம் நிகழ்ந்தது. அவ் ஆட்லறித்தளம் அழிக்கப்பட்டது தரையிறங்கிய அணியினருக்கான உடனடி எதிர்ப்பை இல்லாமல் செய்தது.

தளத்தை அழித்த கரும்புலியணி மீண்டும் எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளால் இரகசியமாக நகர்ந்து விடிவதற்குள் பாதுகாப்பாக தளம் திரும்பினர்.

பளை ஆட்லறித்தள அழிப்பு ஆனையிறவு மீட்புப்போரில் மிகப்பெரிய திருப்புமுனை. எதிரிக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டுபண்ணியது. இந்த அழிப்போடு தரையிறக்கமும் ஒன்றாக நிகழ்ந்ததால் எதிரி மிகவும் குழம்பிப்போனதோடு உடனடியான எதிர்வினையை அவனால் செய்யமுடியவில்லை. தன்னை மீள ஒழுங்கமைத்து தாக்குதல் தொடங்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்பட்டது.

தாக்குதலின் பின்னணி:
குடாரப்புத் தரையிறக்கம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26, 2000 ஆம் ஆண்டு மாலை நேரம் குடாரப்பு பகுதியினை இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அடைகின்றனர் தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள்.

குடாரப்புத் தரையிறக்க மோதல்:
குடாரப்பு பகுதியில் மாலை 8:30 மணியளவில் தரையிறங்கும் வேளை ஏற்பட்ட மோதலில் 16 டோறாப் பீரங்கிப் படகுகள் கொண்ட இலங்கை இராணுவத்தினருடன் கடற்புலிகளின் போர்க்கலங்கள் மோதின. தரையிறங்கு கலங்களிலிருந்த தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் சேதம் எதுவும் ஏற்படாது தரையிறக்கப்பட்டனர்.

கண்டி வீதியில் நிலை கொள்ளல்:
குடாரப்பு பகுதியில் தரையிறங்கிய தமிழீழ விடுதலிப் புலிகளின் போராளிகள் தொண்டமனாறு, கடல் நீரேரி ஊடே இத்தாவில் பகுதியில் உள்ள கண்டி வீதியில் நிலை கொண்டனர். இக்கண்டி வீதியினூடாகவே ஆனையிறவுப் படைத்தளத்திற்கான பிரதான விநியோகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பளை ஆட்லெறித் தள உள்நுழைவு:
கண்டி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிலை கொண்டிருக்கும் வேளை பளை ஆட்லெறித் தளத்தில் உட்புகுந்த கரும்புலி, கரும்புலி அணியினர் அங்கமைந்திருந்த 11 ஆட்லெறிகளைச் செயல் இழக்கச் செய்தனர்.

தமிழீழ விடுதலிப் புலிகளின் வழங்கல் தொடர்பு:
வெற்றிலைக்கேணி முதல் குடாரப்பு வரையிலான 12 கிலோமீற்றர் தூரம் வரையிலான இலங்கை இராணுவத்தினரின் படை முகாம்கள் அழிக்கப்பட்டு அங்குள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் ஆனையிறவின் பல பாகங்களிலும் உள்ள தமது போராளிகளிடையே வழங்கல் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சித்தனர்.

இலங்கை இராணுவத்தின் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்:
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளை எதிர்நோக்கிய தீவிர தாக்குதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. டாங்கிகள், கவச வாகனங்கள், எறிகணைகள் எனப் பல்வேறு வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களிற்கு எதிர்த் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தி(!!):
இத்தாவில் பகுதியில் நிலைகொண்டிருந்த புலிகளின் அணியினை ஒருங்கிணைத்த தளபதி பால்ராஜ் உயிருடன் பிடிபட்ட செய்தியினை தம் களமுனைத் தளபதிகளிடமிருந்து கொழும்புப் படைத்தலைமை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

உடுத்துறை வழியான தரைவழி விநியோகம்:
வத்திராயன், தாளையடி, மருதங்கேணி முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டு உடுத்துறை வழியான தரைவழி விநியோகம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. இத்தரைவழி விநியோகத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைப்படை வீரர்களும் பங்காற்றினர்.

காமினி ஹெட்டியாராச்சி பதவியிலிருந்து விலக்கப்படல்:
இத்தாவில் நிலைகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினைத் தோற்கடிக்க எட்டுற்கு மேற்பட்ட தடைவைகள் மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரால் அவர்களை முறியடிக்காத நிலைக்குத் தள்ளப்பட்டதும் ஆனையிறவுப் படைத்தளத்தில் 53ஆம் படையணியின் தளபதியாக விளங்கிய காமினி ஹெட்டியாராச்சி அவர்தம் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

ஆனையிறவுப் படைத்தளம் மீதான முற்றுகை:
இலங்கைப் படைத் தரப்பினரின் விநியோகங்களைத் தடுத்தவாறே ஆனையிறவுப் படைத் தளத்தினை முற்றுகையிட்டனர் தமிழீழ விடுதலைப் புலிகள். குடாரப்புத் தரையிறக்கத் தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து 34 ஆம் நாட்களின் பின்னர் ஊடறுப்புத் தாக்குதல் யுக்திகளால் ஏப்ரல் 22 ஆம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்தது.


போரியல் நிபுணன் பிரிகேடியர் பால்ராஜ்

செவ்வாய், 17 நவம்பர், 2009

பொருத்தம்

தளிர்மேல் இருக்கும்
வண்ணத்துப்பூச்சியை
குதூகலிக்கத்
தெரியும் எனக்கு

நீயோ
கரன்ஸிக் காகிதங்களில்
வர்ணமிழந்து போகிறவன்

மிக மெல்லிய
கவிதை வரிகளிலும்
எனை மீட்டும்
ஸ்வரங்களிலும்
லயித்திருக்கும் போது
சலித்துக் கொள்கிறாய்
உன் பிரமோஷன்
பற்றி நான்
கேட்பதில்லையென

டிஸம்பர்ப் பூக்களில்
ஆகாய நீலத்தைத்
தேடிக்கொண்டிருக்கும்போது

நீ காம்பவுண்ட் சுவருக்கு
வெள்ளையடிப்பதில்...

எனது
‘ஜே.கே’விலும்
‘ஜெயகாந்தனி’லும்
ஆர்வமில்லை உனக்கு

உன் பொருளியல் கணக்குகள்
புரிவதில்லை
எனக்கு

ஆனாலும்
சுற்றம் பூரிக்கிறது
நமது
‘அழகிய ஜோடிப்பொருத்தம்’
பற்றி

தோல் நிறத்தினையும்
உடல் வடிவத்தையும்
வருடம் ஒருமுறை
‘வாந்தி’யெடுத்து வாங்கிய
‘டிகிரி’யையும் வைத்து...

திங்கள், 16 நவம்பர், 2009

அழைப்பு

அழைப்பு
**********
உற்றுக் கேட்கிறேன்
யாரோ யாரையோ அழைக்கிறார்கள்
மௌனமாக...
ஆனால்
பலமாக...
யாரும் யாரையும்
கவனிக்கவில்லை
அவரவர் கவனம்
அவரவர் அழைப்பில்...
அவரவர் அழுகையில்...
இருந்தும் யாரோ யாரையோ
அழைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்
***********************************
சிறு கவிதைகள்
****************
மழைத்துளி பட்டவுடன்
சிலிர்க்கிறது ரோஜா
என் உதடுகளும் நீயும்
*************
இருவர் கரங்களும்
பின்னிக்கொள்ள
மெல்ல நடப்போம்...
நீ நதியாக...
நான் கரையாக....
**************

பொண்ணுங்க போடுற சீனு தாங்க முடியலப்பா...

இன்னிக்கு இடுகைய என்ன எழுதி மொக்கை போடலாம்னு ர்ர்ர்ரொம்ப குழம்பிட்டு இருக்குறப்போ ஆபத்பாந்தவனா வந்தான் என் நண்பன் பார்த்தசாரதி அலையஸ் “சீன்சாரதி”. ஹைதராபாதிலிருந்து அவன் மெயிலியது:
(அவனுக்கும் ஒருவேளை இது ஃபார்வர்டு மெயிலா இருக்கலாம்... யாராவது “என்னிடமிருந்து திருடியது”னு கேஸ் போட்டுட போறாங்க. 'அப்றம் நான் ஷாக் ஆயிடுவேன்!')இன்றைய இளம் பெண்களிடம் நான் பார்த்த சில பொதுவான விசயங்கள், நீங்கள் யோசிக்க

1) இரு பொருட்கள் எப்பொழுதும் இவர்கள் கைகளில் இருக்கும்.ஒன்று கைக்குட்டை மற்றொன்று மொபைல், இரண்டுமே சின்னதாக இருக்கும்.மேலும் வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் காணப்படும்.

2) கைப்பேசியில் பேசும்பொழுது,காதருகு முடி ஒதுக்குவதையும் அல்லது கழுத்துச்சங்கிலியை வருடுவதையும் நாம் காணலாம்.

3) இதுவரை எந்த பெண்ணும் பொய்யே சொன்னதில்லை அல்லது சொன்னதாக ஒப்புக்கொண்டதும் இல்லை.

4) “ஐ டோண்ட் குக்”,”ஐ நெவர் பீன் டு கிச்சன்”- பொதுவாக இளம் நங்கைகளிடம் நாம் கேட்கலாம்.

5) நான் ஸ்ட்ரெயிட் பார்வேர்டு –ன அனைத்து பெண்களும் சொல்வது.”என்ன கொடுமை சார் இது ?”

6) ஐந்து ஆண்களுக்கு மேல் ஒரு பெண்ணுக்கு நண்பர்கள் இருந்தால் அவள் தன்னை சோசியல் / ஜோவியல் டைப் என்று சொல்லிக்கொள்வாள்.

7) “எனக்கு ஐஸ்க்ரீம் ரொம்ப பிடிக்கும் “ –எல்லா பெண்களும் சொல்வது. உண்மையில் ஆண்கள்தான் அவர்களைவிட அதிகம் உண்பவர்கள்.

8) எல்லா பெண்களும், எல்லா நாட்களிலும் சொல்லும் ஒரு வரி - “நான் டயட்டில் இருக்கிறேன்”.

9) “எனக்கு டி வி சீரியல் பிடிக்காது” என்பார்கள் நன்பர்களிடம்.

10) கி.பி 2000 திற்கு பிறகு கல்லூரிக்கு செல்லும் எந்த பெண்ணும் இந்தியாவில் பிறந்ததில்லை.

11) பயணம் செய்கையில் பொதுவாக தனது ஆண் நண்பர்களிடம் கைப்பேசியில் பேசுவது அவர்களது வழக்கம்.

12) எந்தப்பெண்ணும் 3000 நிமிடம் பேசினாலும் 300 ரூபாய்க்கு மேல் மொபைல் பில் கட்டியதில்லை.(மிஸ்டு கால் மின்மினிகள்!)

13) எல்லா பெண்களும் சொல்லும் ஒரு வரி - “ உனக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸே இல்லை “.(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....)

14) இரவு 12 மணிக்கு முன்னே தூங்கிவிட்டால் அந்த பெண் கல்லூரி செல்லும் பெண் இல்லை என்று பொருள்.

அன்புடன்
ஆர்.பார்த்தசாரதி

ஞாயிறு, 15 நவம்பர், 2009

மவனே செத்தீங்கடா....

பாத்ரூமில் நனைத்துப்போடப்பட்டிருந்த “லக்கி”யின் ஜட்டி தூக்கம் கலைந்து விழித்தபோது ஆளில்லா சாலையில் தன்னந்தனியே பேசிக்கொண்டு நடந்துகொண்டிருந்த உக்கிரவழுதிப்பாண்டியனுக்கு சிறுநீர் கழிக்கும் உந்துதல் வந்து ஜிப்பை தளர்த்த பேண்ட்டிற்குள் இருந்து குதித்த பாம்பு மெல்ல நழுவி 27C யில் ஏறி அமர்ந்து 1,35,87,26,49,83,48,89,95,34,732 பைசாக்களை எண்ணிக்கொடுத்து 7830B.Cக்கு டிக்கெட் வாங்கி 15 நிமிடம் கழித்து இறங்கிப் பார்க்கையில் சூரியன் தன்பழுப்பு நிறக்கிரணங்களை வீசிக்கொண்டிருப்பதை சட்டை செய்யாமல் தாவிக்குதித்து 321-ம் கிளியோபாத்ராவின் அந்தரங்க அறைக்குள் நுழைந்து தன்னை இருபத்தி நாலு அங்குல ஆண்குறியாக உருமாற்றிக்கொண்டபின் அவளது படுக்கையில் சற்றே கண்ணயர்ந்துக் கொண்டிருக்கையில், காஷ்மீரத்துக்குடிசையொன்றில் ரோஜா நிறத்தையொத்த இளங்கன்னியை வன்புணர்ந்துகொண்டிருந்த கரும்பச்சைச்சீருடையணிந்த வீர இளைஞனின் காதுக்குள் வந்து ரீங்கரித்த குளவியொன்று மெல்ல நகர்ந்துபோய் சற்று தொலைவாயிருந்த பஃகறுளியாற்றங்கரையிலமர்ந்து இந்தக்கதையை எப்படி முடிப்பது என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்த இருபத்தியெட்டாம் ஈழப்போரில் எஞ்சியிருந்த இறுதித்தமிழன் குலோத்துங்கப்புலிகேசிப்பாண்டியநெடுவழுதிப்பல்லவ காளிங்கராயனினருகிலமர்ந்து “உனக்கொரு கதை சொல்கிறேன், கேள்” என்று சொல்லத்துவங்கிய கதை யாதெனின்.........

நினைப்பு

பகல்முழுக்க ஓடி
அலுத்துச் சலித்த
இரவுகளில்...
எப்போதாவது அணைக்கும்
தொந்தி குலுங்கும்
கணவனின் கீச்சுக்குரலில்...
“பன்னி மாதிரி ஆயிட்டேடி”
வார்த்தை ஊசிகள்
கிளறிவிடும்...
தாவணிப்பருவத்தில்
முதல்முத்தம் கொடுத்த
அரும்புமீசைக் காதலனின்
முகம்...
மிக மங்கலாய்...
“அப்படியே இருந்திருக்கலாமோ?”

சனி, 14 நவம்பர், 2009

நினைவினின்று நழுவும் முன்...

மிக உயரத்தில்
வட்டமிட்டபடி கழுகுகள்...
தூரத்திலிருந்து சன்னமாய்
இன்னும் கேட்டுக்கொண்டுதானிருகின்றது
பீரங்கி முழக்கம்....

மெல்ல மெல்ல
அசைந்து வந்து
அந்தியைத் தழுவும் இருளாய்
என்னிடத்தே
மரணத்தின் சாயல்...

மார்பிலும் வயிற்றிலும்
பொருந்திய குண்டுகள்
உயிராழத்தை ரணப்படுத்தியபடி...

குருதி குடித்துச் சிவந்த
என் தாய்மண்ணே!
நாளை உன்னிடத்தே
நான் பொறிக்கப் படலாம்
அல்லது
மறக்கப்படலாம்...

நான் போகிறேன்...

என்ன செய்யப்
போகிறாய்...
எனக்காய்க் காத்திருக்கும்
என் மனைவியை?

வெள்ளி, 13 நவம்பர், 2009

நான் ஒரு முட்டாளுங்க...

எவ்ளோதான் எடுத்துச் சொன்னாலும் நம்மளை மாதிரி ஜென்மங்களுக்கு சில விஷயம் ஏறவே மாட்டேங்குது! ஆளாளுக்கு "போடா முட்டாக்கூ... "( அட கூமுட்டைங்க!) அப்டீன்னு கண்டமேனிக்கு திட்டிட்டு போனா கூட... ம்ஹூம்... நாம திருந்தவா போறோம்?
"விஷயத்தையே சொல்லாம என்னடா புலம்பல்?"னு நீங்களும் திட்ட ஆரம்பிச்சிடாதீங்க.
ஒன்னுமில்லீங்க! நமக்கு கொஞ்சம் கிறுக்கு ஜாஸ்தி.அப்புறம் வாய்த்துடுக்கு வேற! 'பெர்ய மனுஷங்க' இருக்குற சபையில எதாவது ஒண்ணுகிடக்க ஒன்னு டவுட் கேட்டு அப்புறம் வழக்கம்போல திட்டு வாங்குவேன்.
அன்னிக்கும் அப்படிதான் சார்! நாலு 'பெர்ய மனுசனுங்கோ' இருக்குறப்போ ஒரு ஒலகமகா டவுட்ட கேட்டுட்டேன்.
"அண்ணே! "இந்த பிரபாகரன் செத்துபூட்டாரு. அவரு அம்மனகுண்டியா கிடந்தப்போ நாங்கதான் அவருக்கு ட்ரஸ் மாட்டி விட்டோம்! அவரு பொணத்தை கூட நல்லபடியா எரிச்சி சாம்பலையும் கடல்ல கரைச்சாச்சு! உங்களுக்கு தேவைப்பட்டா டெத் சர்டிபிகேட் கூட தர்றோம்!" அப்படீன்னு இலங்கை கவுருமெண்ட்டு சொன்னாங்களாமே? அது உண்மையா?" னு கேட்டு தொலைச்சேன்.
உடனே என் பக்கத்துல இருந்த எங்க ஊரு வக்கீல் அண்ணன் "டேய்! என்னடா உனக்கு புது டவுட்டு! அதுக்கு அப்புறம் நம்ம நாராயணன்கூட போயி பாத்துட்டு "சீக்கிரமா அந்த சர்டிபிகேட்ட அனுப்பி வைங்க. எங்க தலிவரு ராசீவு கொலைகேசை முடிக்க அது வோணும்"னு சொல்லிட்டு வந்தார்! ஆனா இன்னும் அவங்க கொடுக்கலைடா"னு சொன்னார்.
நான் வாயையும் சூ....... யும் மூடிட்டு இருந்திருக்கலாம்! சனி சும்மாவா இருக்கும்?
"அப்படியாண்ணே? அந்த கேச நம்ம நாட்டுலேயே பெரிய போலீசு சி.பி.ஐ தான விஜாரிக்குதாம்! அவங்க கூட மறுபடியும் இலங்கை கவுருமண்டுகிட்ட கேக்கலியா? அப்புறம் நம்ம சோனியா அம்மா கூட அதைப்பத்தி ஒன்னும் கண்டுக்கலயே? ஏன் அண்ணே?" கேட்டேன்.
அவ்ளோ தான்! "பெர்ய மனுசங்ககிட்ட எது எதை கேக்கனும்னு விவஸ்தை இருக்காடா உனக்கு?"னு சொல்லிட்டு பக்கத்தல இருந்த விளக்கமாத்த எடுத்தாரு. அப்புறம் நான் எதுக்கு அங்க நிக்க போறேன்?
நான் கேட்டது தப்பாங்க?
Related Posts with Thumbnails